பாரிசானின் பிரதமர் வேட்பாளர் அன்வாரா? பாஸ் கட்சி கேள்வி!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 14

பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யார் எனும் விவகாரத்தில் பக்காத்தான் பாரிசான் அரசியல்வாரிகள் ஆர்வமாக இருந்தாலும் அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசானின் பிரதமர் வேட்பாளர் அன்வாரா எனும் கேள்வியைப் பாஸ் கட்சியின் தகவல்தொடர்பாளர் Ahmad Fadhli Shaari முன்வைத்துள்ளார். பக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் அன்வார் என்பதில் அந்த கூட்டணி உறுதியாக இருக்கிறது. ஆனால் பாரிசான் அன்வார் தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ளுமா என Ahmad Fadhli Shaari கேள்வி எழுப்பினார். 

பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பாரிசான் ஆர்வாக இருக்கிறது. உங்கள் கட்சியையும் உங்கள் கூட்டணிக் கட்சிகளையும் முதலில் பாருங்கள். அதன்பின்னர் எதிர்கட்சியின் விவகாரங்களில் தலையிடலாம் என Ahmad Fadhli Shaari பாரிசானுக்குப் பதிலளித்துள்ளார். ஆளும்கட்சியாக இருக்கும் பாரிசானுக்கே பிரதமர் வேட்பாளர் இல்லை. இவர்களுக்குப் பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் யாராக இருந்தால் என்ன என Ahmad Fadhli Shaari தெரிவித்தார். பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் ஒரு பக்கம் இருக்கட்டும். பாரிசானின் பிரதமர் வேட்பாளர் அன்வாரா என்பதைப் பாரிசான் தலைவர்கள் உறுதிப்படுத்தட்டும் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *