பாரிசானுக்குச் சமாதிக் கட்டுவோம்! பக்காத்தான் மாநிலத் தலைவர் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 17 May, 2026
மே 17,
பக்காத்தானுக்கு எதிராகப் பாரிசான் தேர்தலில் போட்டியிட்டால் பாரிசானுக்குச் சமாதி கட்டும் தேர்தலாக அது அமையும் என ஜொகூர் மாநிலப் பக்காத்தான் தலைவர் Aminolhuda Hassan எச்சரிக்கை விடுத்தார். கூட்டணியில் இருக்கும் போதே ஜொகூரில் பாரிசான் தனித்துப் போட்டியிடும் என ஜொகூர் மாநில மெந்திரி பெசாரும் ஜொகூர் மாநிலப் பாரிசான் தலைவருமான Datuk Onn Hafiz Ghazi ஆணவமாகப் பேசுகிறார் என Aminolhuda Hassan குற்றம்சாட்டினார்.
பாரிசான் தனித்துப் போட்டியிட்டால் பக்காத்தானுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 56 சட்டமன்றங்களிலும் பக்காத்தான் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் Aminolhuda Hassan வலியுறுத்தினார். என்ன ஆனாலும் சரி. இப்போதே பக்காத்தான் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட வேண்டும். ஜொகூரின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாக்காத்தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என Aminolhuda Hassan பக்காத்தான் தலைமைக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



