பாரிசானிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை! ம.சீ.ச உறுதி!
- Thinagaren Sanggaren
- 27 Oct, 2025
அக்தோபர் 27,
பாரிசானின் உறுப்புக் கட்சிகளிடையே நிலவும் கருத்து மோதல்கள் என்பது இயல்பானது என்பதால் அது தீவிரமடையாமல் கட்டுப்படுத்தும் பொறுப்பு அதன் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என ம.சீ.ச தலைவர் Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். ம.சீ.சவின் ஒரு சில தலைவர்களும் பாரிசான் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் அது தீவிரமடையாமல் பாதுகாக்க வேண்டியது பாரிசான் உறுப்புக் கட்சித் தலைவராக எனது பொறுப்பு என Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார்.
சபா தேர்தலில் ம.சீ.ச போட்டியிடவிருக்கும் சட்டமன்றங்களைத் தேர்வு செய்து வேட்பாளர்கள் பட்டியலையும் பாரிசான் தலைமைக்கு வழங்கியிருப்பதாக Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். பாரிசானின் உறுப்புக் காட்சியாக ம.சீ.ச தேர்தலை எதிர்கொள்வதில் சபா ம.சீ.சவுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். சபாவில் கடந்த 34 ஆண்டுகளாக ம.சீ.ச செயல்பட்டு வருவதால் சபா சட்டமன்றத் தேர்தலில் ம.சீ.ச போட்டியிடுகிறது என Datuk Seri Wee Ka Siong விளக்கமளித்தார். அடுத்து திரங்கானு சட்டமன்றத் தேர்தலிலும் பாரிசானின் உறுப்புக் கட்சியாக ம.சீ.ச போட்டியிடும் என்பதை Datuk Seri Wee Ka Siong உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



