பாரிசானிலிருந்து வெளியேறினால் மீண்டும் பாரிசானுக்குள் நுழைய முடியாது! - ZAHID HAMIDI எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 15 Dec, 2025
டிசம்பர் 15,
பாரிசான் உறுப்புக் கட்சிகளாக இருக்கும் கூட்டணிக் கட்சிகள் பாரிசானிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தால் பலமுறை பரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi எச்சரிக்கை விடுத்தார். வெளியேறும் பாதை ஒன்று தான். வெளியேறிய பின்னர் வருந்தி, மீண்டும் பாரிசானில் இணைந்துக் கொள்ள வேண்டும் என்றால் அது முடியாது என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
உண்மையில் யாரையுமே பாரிசானிலிருந்து விலகும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை. ஒரே குடையின் கீழ் இயங்கவே நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் வெளியேற வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் ஒரு சிலரிடம் கண்ணியமான பேச்சுவார்த்தைகளைப் பாரிசான் நடத்தி வருகிறது. ஆகையால் பாரிசானிலிருந்து வெளியேறுவது மிகவும் சிரமம். அவ்வளவு எளிதாகக் கூட்டணி கட்சிகளைப் பாரிசான் கைவிட்டு விடாது. அதையும் மீறி நீங்கள் வெளியேறினால் அந்த கட்சியைப் பல வகையில் அது பாதிக்கும். கட்சியின் அழிவுக்குக் கொண்டு செல்லும். அப்போது வருந்தி, மீண்டும் பாரிசானில் இணைந்துக் கொள்ளலாம் என நினைத்தால் அது முடியவே முடியாது. வெளியேறும் பாதையைக் கூட்டணிக் கட்சிகள் தீர்மானிக்கலாம் என்றாலும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi எச்சரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



