பாரிசானுடன் இருப்பது ம.இ.காவுக்கு நல்லது! சரவணனுக்கு அம்னோ எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 2,

அரசாங்கத்தால் ம.இ.கா ஏமாற்றப்படுவதாகவும் ஒதுக்கப்படுவதாகவும் ம.இ.காவின் துணைத் தலைவர் சரவணன் தெரிவித்திருக்கும் கருத்து அபத்தமான குற்றச்சாட்டு என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi தெரிவித்துள்ளார். பாரிசான் அதன் உறுப்புக் கட்சிகளை அரவணைத்து செயல்படவே எண்ணுகிறது என்பதை Puad Zarkashi நினைவூட்டினார். ஒரு நாடாளுமன்றத்தைக் கொண்டிருந்தாலும் பாரிசான் ம.இ.காவை ஒதுக்கவோ புறக்கணிக்கவோ விரும்பவில்லை என்பதை ம.இ.காவினர் உணர்ந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச நன்றியுடன் இருப்பது ம.இ.காவுக்கு நல்லது என அவர் சுட்டிக்காட்டினார். 

ம.இ.கா , அம்னோ , ம.சீ.ச எனும் உறுப்பு கட்சிகளின் கூட்டமைப்பு தான் பாரிசான். பாரிசானில் ம.இ.கா ஓரங்கட்டப்படுவதாக ம.இ.காவினர் நினைத்தால் பாரிசானின் தலைமையிலிருக்கும் ம.இ.காவினரே பொறுப்பு என்பதை Puad Zarkashi நிறைவூட்டினார். 2022 பொதுத் தேர்தலுக்குப் பின் முகைதீனை ஆதரித்தார் சரவணன். பாரிசானின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தை மீறியது ம.இ.கா என்பதை Puad Zarkashi வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாரிசான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் அதை மீறினால் RM 100 மில்லியன் வரையில் அபராதம் விதிக்கபடுவதுடன்  நாடாளுமன்றத்தில் இடைத்தேர்தல் விதிக்கப்படும் என்பதை ம.இ.காவுக்கு அம்னோ நினைவூட்டியதை அடுத்து முகைதீனுக்கு அளித்த ஆதரவைச் சரவணன் மீட்டுக் கொண்டார் என PUAD ZARKASHI தெரிவித்தார். 

அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ எத்தனை நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும் என சரவணன் சவால் விடுகிறார். பாரிசான் இல்லை எனில் சரவணனுக்குத் தாப்பா நாடாளுமன்றமும் இல்லை என்பதைச் சரவணன் உணராமல் பேசுகிறார் என Puad Zarkashi நினைவூட்டினார். சரவணனின் கோட்டை என தாப்பா நாடாளுமன்றத்தைக் குறிப்பிடுபவர்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். அது சரவணின் கோட்டை இல்லை. அது பாரிசானின் கோட்டை. பாரிசான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பாரிசானின் சின்னத்தில் வாக்களித்தவர்களே தாப்பா மக்கள். சரவணன் பாரிசான் சின்னத்தில் போட்டியிடாமல் மற்ற சின்னத்தில் போட்டியிட முடியுமா? வெல்வாரா? அம்னோவைச் சவால் விடும்படி சரவணன் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு ம.இ.கா பொறுப்பேற்க வேண்டும். இல்லையேல் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து அது என பாரிசான் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் Puad Zarkashi எச்சரிக்கை விடுத்தார். 

ம.இ.காவை அன்வார் ஏமாற்றி விட்டார் என கடந்த வாரம் சரவணன் வெளியிட்ட கருத்துக்குப் பாரிசான் எந்தவோர் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அது பிரதமருக்கும் பிரதமருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குமான சமரசங்கள். ஆனால் பாரிசான் தலைவர் Zahid Hamidi ம.இ.காவை ஏமாற்றி விட்டார் என சரவணன் இப்போது தெரிவித்திருப்பது அர்த்தமற்றது. சரவணன் கேட்க வேண்டியது அன்வாரிடம். பாரிசானிடமில்லை. பதவிக்காக மட்டுமே சரவணன் இப்போது பாரிசானைக் கேள்வி கேட்கிறார்  யாருடைய பதவியையும் பாரிசான் அபகரிக்கவில்லை, காலங்காலமாகப் பாரிசான் அரசாங்கத்தில் வளமாக இருந்த ம.இ.கா என்பதை மறக்க கூடாது. ஒரு நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டு அன்வாரிடன் பதவியைக் கேட்பதை விடவும் பாரிசானின் உறுப்புக்கட்சியாக 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அன்வாரிடம் பதவியைக் கேட்பது சாதுரியம் என சரவணன் உணர வேண்டும் என Puad Zarkashi சரவணனுக்கு நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *