பாரிசானுக்குத் துரோகம் செய்தீர்களா இல்லையா? ம.இ.காவுக்கு அம்னோ கேள்வி!
- Thinagaren Sanggaren
- 02 Aug, 2025
ஆகஸ்ட் 2,
கடந்த 2022 பொதுத்தேர்தலுக்குப் பிறகு முகைதீனுக்கு ஆதரவளிக்கும் நிலைபாட்டை ம.இ.கா கொண்டிருந்ததா இல்லையா என்பதை ம.இ.கா தெளிவுப்படுத்த வேண்டும் என அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான PUAD ZARKASHI கேள்வி எழுப்பினார். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தான் கூட்டணிக்கும் பக்காத்தான் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாரிசானுடன் கூட்டணி அமைக்க இரு கூட்டணிக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்தனர். இது ம.இ.காவுக்கும் தெரியும். அந்த நேரத்தில் அதிகாலை 1 மணிவரையும் அம்னோவின் உச்சமன்றக் குழு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் அன்வார் வேண்டாம், டி.ஏ.பி வேண்டாம் எனும் கொள்கையைத் தளர்த்தி பக்காத்தானுடன் கூட்டணி அமைக்க பாரிசான் தயாரான நிலையில் ம.இ.கா அமைதியாகவே இருந்தது.
ம.இ.காவின் அமைதிக்குப் பின்னால் துரோகம் மறைந்திருந்தது என ஒரு தொலைப்பேசி அழைப்பு உறுதிப்படுத்தியது. பாரிசானின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகைதீன் தலைமையிலான பெரிக்காத்தானுக்கு ஆதரவளிப்பதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருந்ததாகவும் அந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ம.இ.காவின் சரவணன் ஒருவர் என்பதை அந்த தொலைப்பேசி அழைப்பு உறுதிப்படுத்தியதாக PUAD ZARKASHI தெரிவித்துள்ளார். அப்படியானால் பாரிசானில் அங்கம் வகித்துக் கொண்டே ம.இ.கா பெரிக்காத்தானை ஆதரித்ததா? முகைதீனுக்குச் சரவணன் ஆதரவளித்திருப்பது சரவணனின் தனிப்பட்ட விருப்பமா அல்லது ம.இ.காவின் முடிவா என்பதை ம.இ.கா உறுதிப்படுத்த வேண்டும் என PUAD ZARKASHI வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



