பாரிசானிலிருந்து யார் வெளியேறினாலும் அம்னோ நிலைத்திருக்கும்! – அம்னோ சூளுரை!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 4,

பாரிசான் நேஷனிலிருந்து எந்தவொரு தரப்பினர் வெளியேறுவதாக இருந்தாலும் அம்னோ நிலையாகப் பாரிசானை ஆதரித்து மலேசிய அரசியல் சூழைலைக் கட்டிக்காக்கும் என அம்னோ உதவித் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். பாரிசானின் உறுப்புக் கட்சிகளின் முடிவை நான் குறை சொல்லவோ ஆதரிக்கவோ இல்லை. நான் என்னுடைய அரசியலில் விசுவாசமாக இருக்கிறேனா என்பதை மட்டும் நான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை அம்னோவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். அதிகாரத்தில் இருக்கும் போது தலையில் ஏறி ஆடும் அளவிற்கு நெருக்கமாகவும், அதிகாரம் இல்லாத சூழலில் கால்களை இடரிவிடுபவர்கள் அரசியலில் அதிகம் என்பதை உணர்ந்திருந்தாலும் நாம் யாரையும் இடரிவிடாமல் நாம் இருந்தாலே போதும் என்பதை அம்னோவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என Datuk Seri Mohamed Khaled Nordin நினைவூட்டினார். 

அம்னோவின் இப்போதைய நிலை சோதனையான நிலை என்பதை நாம் உணர்ந்து, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற என்ன மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் சந்திக்க வேண்டும். மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற அம்னோ என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம். பாரிசானின் உறுப்புக் கட்சிகள் அவர்களின் சமூகத்தினரின் ஆதரவை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாலே அதிகாரம் மீண்டும் நம் கையில் என Datuk Seri Mohamed Khaled Nordin நினைவூட்டினார். முந்தைய அரசியல் சூழல் இப்போது இல்லை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும். நாட்டின் எல்லா கட்சிகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டனர். அதனால் இப்போது புதியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்கிற எண்ணம் மக்களுக்கு இருக்காது. சொன்னதைச் செய்தவர் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அவர்களையே மக்களும் அங்கீகரிப்பார்கள் என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் உணர்ந்து செய்ததை நினைவூட்டி, மக்கள் நலனின் கவனம் செலுத்த கட்சிகள் முன்வர வேண்டும் என Datuk Seri Mohamed Khaled Nordin வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *