ம.இ.கா முடிவு எடுக்கவில்லை எனில் பாரிசான் முடிவெடுக்கும்! - ZAHID HAMIDI அதிரடி!
- Thinagaren Sanggaren
- 15 Dec, 2025
டிசம்பர் 15,
பாரிசான் கூட்டணியில் நீடிப்பதா விலகுவதா என்பது குறித்து ம.இ.கா கட்சி முடிவெடுக்கவில்லை என்றால் பாரிசான் தலைமை அதன் முடிவை எடுக்கும் என பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi வெளிப்படையாக அறிவித்தார். ம.இ.கா அதன் 79 ஆவது பேராளர் மாநாட்டில் பாரிசானிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கடந்த மாதம் நவம்பர் 20. அதனை அடுத்து இப்போது வரையிலும் ம.இ.கா அதன் தலைமை கூட்டணியானப் பாரிசானுக்கு எந்தவோர் அறிக்கையும் வழங்கவில்லை என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
ம.இ.காவின் விலகல் குறித்து பாரிசான் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் ம.இ.காவுக்கு எதிராகப் எந்தவொரு கூட்டத்தையும் பாரிசான் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் ம.இ.காவால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை என்றால் பாரிசான் ஒரு முடிவு எடுக்கும். அந்த முடிவு நிச்சயமாக என் தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது பாரிசானின் ஒருங்கிணைந்த முடிவாகவே இருக்கும் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
மாறி வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப பாரிசான் முடிவெடுக்க வேண்டும். பாரிசான் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் அரசியல் போக்கை நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அரசியல் நீரோட்டத்தில் அரசியல் கட்சி காணாமல் போய்விடும். பழயதைப் பேசி, பழமை அரசியலில் மூழ்க பாரிசானுக்கு விருப்பம் இல்லை. சரியோ தவறோ, மக்கள் நலனுக்காக அரசியலில் இருக்கிறோம். மக்களின் எண்ணத்தை உள்வாங்கி அரசியல் நடத்துவோம் என பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi வெளிப்படையாக அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



