பாக்காத்தான் + பாரிசான் இணைந்து புதிய கட்சியா? – அம்னோ விளக்கம்!

top-news

ஜூன் 29,


பாரிசானும் பக்காத்தானும் இணைந்து அரசாங்கத்தை மட்டுமே அமைத்திருப்பதாகவும் புதிய கட்சியைத் தோற்றுவிக்கும் எண்ணத்தை இரு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என அமைச்சரும் அம்னோ துணைத் தலைவருமான Datuk Seri Mohamad Hasan இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தானுடன் பாரிசான் கூட்டணி அமைக்குமா எனும்படியானக் கேள்விகள் தற்போது எழுந்துள்ளதால் Datuk Seri Mohamad Hasan விளக்கமளித்தார். கடந்த 15 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 3 நாள்கள் கடந்தும் ஆட்சி அமைக்கப்படாமல் இருந்ததால் பக்காத்தானுடன் பாரிசான் கூட்டணி அமைத்தது. அதற்காகப் பொதுத் தேர்தலில் இரு கூட்டணி கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார். 

தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்காமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகுந்த பின்னடைவைச் சந்திக்கும் என்பதால் பாரிசான் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டதாகவும் நிலையான அரசாங்கத்தை அமைக்க மட்டுமே பக்காத்தானுடன் இணைந்ததாகவும் பொதுத்தேர்தலுக்கானக் கூட்டணியாக அல்ல என்பதை Datuk Seri Mohamad Hasan தெளிவுப்படுத்தினார். சுயநலத்திற்காகப் பாரிசான் பக்காத்தானுடன் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக 56 அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் 54 உச்சமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடனும் பாரிசானின் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுடனுமே பக்காத்தானுடன் அரசாங்கத்தை அமைக்க கூட்டணி ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார்.


UMNO menegaskan kerjasama Barisan Nasional dan Pakatan Harapan hanya untuk membentuk kerajaan stabil selepas PRU15, bukan untuk menubuhkan parti baharu. Datuk Seri Mohamad Hasan menolak spekulasi gabungan baharu menjelang pilihan raya umum akan datang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *