BN+PAS இடையிலான உடன்பாடுகள்! பாரிசானுக்கு டி.ஏ.பி SKUDAI வேட்பாளர் Kartiyaini சரமாரி கேள்வி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 6,

ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதும். அதிலும் குறிப்பாகப் பாரிசான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதிகளில் பாஸ் போட்டியிடாமல் தவிர்ப்பது பாரிசானுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான அதன் மறைமுக உடன்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக SKUDAI சட்டமன்றத்தின் பக்காத்தான் வேட்பாளர் Kartiyaini Jeyapalan தெரிவித்துள்ளார். 

ஜொகூர் மாநில அரசாங்கத்தில் நியமனச் சட்டமன்ற உறுப்பினர்களை மெந்திரி பெசார் நியமிக்கும் போது பாஸ் கட்சியினர்களுக்கும் அந்த வாய்ப்புகளைப் பாரிசான் அரசு வழங்கும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகவும் இது குறித்து ஜொகூர் மாநிலப் பாரிசான் தலைவராம ONN GHAZI HAFIZ விளக்கமளிக்க வேண்டும் என Kartiyaini Jeyapalan சவால் விடுத்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பாரிசான் வேட்பாளர்கள் நியமனச் சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என்றால், பாஸ் கட்சியினருக்கு அந்த வாய்ப்பைப் பாரிசான் வழங்குமா எனும் கேள்வியையும் Kartiyaini Jeyapalan எழுப்பியுள்ளார். 

தேர்தலுக்குப் பின்னர் அமையக்கூடிய அரசாங்கம் நேர்மையான அரசாங்கமாக இருக்க வேண்டும். திரைக்குப் பின்னால் எதிர்க்கட்சியினருடன் உடன்படிக்கை செய்து கொண்டு திரைக்கு முன் மக்களை ஏமாற்ற கூடாது என Kartiyaini Jeyapalan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *