அரசு ஊழியர்களை இழிவுப்படுத்தினால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்! எதிர்கட்சி MP-களுக்குச் சபாநாயகர் எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
இன்று நாடாளுமன்றத்தில் மலேசியா அமேரிக்கா இடையிலான A.R.T வர்த்தக ஒப்பந்தம் குறித்து முதலீடு வர்த்தக தொழில்துறை அமைச்சர் Datuk Seri Tengku Zafrul விளக்கமளித்த போது எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு Datuk Seri Tengku Zafrul அரசு ஊழியர்களைப் பொம்மையாகப் பயன்படுத்தவதாகக் கூச்சலிட்டனர். இது அரசு ஊழியர்களின் சேவையை இழிவுப்படுத்துவதால் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் Tan Sri Johari Abdul எச்சரிக்கை விடுத்தார். அரசு ஊழியர்களை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உணர வேண்டும். தகுதியான அரசு ஊழியர்களால் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் அவர்களை இழிவுப்படுத்துவதை மக்களவை ஏற்காது என Tan Sri Johari Abdul தெரிவித்தார்.
மலேசியா அமேரிக்கா இடையிலான A.R.T வர்த்தக ஒப்பந்தத்தின் சாரம்சங்களை அரசு ஊழியர்கள் முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தனமாக இருந்ததால் அரசாங்கமும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழித்திட்டிருப்பதாகப் பெரிக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal குற்றச்சாட்டை முன் வைத்தார். அவருடன் பெரிக்காத்தானின் Datuk Rosol Wahid, Datuk Wan Saiful Wan Jan, Datuk Awang Hashim ஆகிய பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையின் அரசு ஊழியர்களின் சேவையில் குறை இருப்பதாகவும் அவர்கள் தகுதியற்றவர்கள் எனும்படியாகக் கருத்துகளை வெளியிட்டு கூச்சலிட்டனர். அரசு ஊழியர்களை எதிர்கட்சியினர் இழிவுப்படுத்திவிட்டதாகப் பக்காத்தானின் Syahredzan Johan, Mohd Sany Hamzan ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் Wan Ahmad Fayhsal எல்லை மீறி பேசுகிறார். அவர் வாயை மூடிக்கொண்டு இருப்பது பெரிக்காத்தானுக்கு நல்லது என தெரிவித்ததை அடுத்து நாடாளுமன்றச் சபாயநாகர் Tan Sri Johari Abdul இனியும் அரசு ஊழியர்களின் பணிகளை இழிவுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டால் விசாரணையின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



