பாரிசான் வெற்றிக்குப் பெரிக்காத்தானின் ஆதரவு முக்கிய காரணம்! டி.ஏ.பி விரக்தி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 12,

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் மாபெரும் வெற்றி பெற்றதற்குப் பெரிக்காத்தானின் ஆதரவு முக்கிய காரணம் என டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான சட்டமன்றங்களில் பெரிக்காத்தான் ஆதரவாளர்கள் பக்காத்தானுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்கள் பாரிசானுக்கு வாக்கு செலுத்தியிருப்பதாக Anthony Loke தெரிவித்தார்.

கடந்த 2022 பொதுத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதனால் பக்காத்தான் அதன் வெற்றியை உறுதி செய்தது. ஆனால் இந்த முறை பெரிக்காத்தான் திட்டமிட்டு பக்காத்தானை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் பாரிசானின் ஆதரவுடன் மோதியிருக்கிறது என Anthony Loke தெரிவித்தார். ஜொகூர் தேர்தல் டி.ஏ.பிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அடுத்து நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் தேர்தலில் பக்காத்தான் அதன் தேர்தல் வியூகத்தைக் கட்டமைக்கவிருப்பதாக Anthony Loke தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *