பாரிசானை விட்டு வெளியேறும் முன் RM 100மில்லியன் அபராதம் நினைவிருக்கட்டும்! – அம்னோ எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

கடந்த பொதுத்தேர்தலில் பாரிசான் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பாரிசானை விட்டு வெளியேறும் எண்ணம் கொண்டிருந்தால் கட்சியின் வேட்பாளர் உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்படி அம்னோவின் பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki எச்சரிக்கை விடுத்துள்ளார். பாரிசான் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பாரிசானுடனான உடன்படிக்கையை மீறாமல் இருப்பது அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். 

சபாவில் பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதாகவும் அதுவும் பாரிசானுக்கு எதிராக மற்ற கட்சிகளுடன் தனிப்பட்ட கூட்டணியை அமைத்து சட்டமன்றத்தில் போட்டியிடவிருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்திகள் வெறும் வதந்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். 

முக்கியமாக இந்த பாரிசான் வேட்பாளர் உடன்படிக்கை பாரிசான் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புரியும் என்றும் தேவையில்லாமல் பாரிசானுக்கு எதிராகச் செயல்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனவிலும் நினைக்க வேண்டாம் என்றும் இது சபாவைச் சேர்ந்த பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினருக்கான நினைவூட்டல் மட்டுமல்ல பாரிசானைக் கைகழுவ எண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது நினைவூட்டலாகலாம் என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *