கெந்திங்கில் பயணிகள் பேருந்தும் இரு வாகனங்களும் விபத்து! தப்பிய 21 வெளிநாட்டுப் பயணிகள்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 11, 

கெந்திங் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பயணிகள் பேருந்து இரு வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் பேருந்தில் 20 வியாட்னாம் நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஓட்டுநர் ஒருவரும் இருந்ததாகவும் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பயணிகள் பேருந்து மைவி வாகனத்தையும் இன்னோவா வாகனத்தையும் மோதி சாலையின் தடுப்புச் சுவரை மோதியதாக நம்பப்படுகிறது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலிருந்த நால்வர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் பேருந்தில் பயணித்தவர்கள் காயங்களின்றி தப்பியதாகவும் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். விபத்துக்குள்ளான பேருந்து கெந்திங்கிலிருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது, விபத்து ஏற்பட்டதற்கான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் எந்தவொரு நபரும் படுகாயமும் அடையவில்லை என பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *