40 பயணிகளுடன் லாரியை மோதிய பேருந்து! ஓட்டுநர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயது பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இன்று அதிகாலை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரெம்பாவ் அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை 3.45 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக நெகிரி செம்பிலான் மாநில மீட்பு ஆணையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
விபத்தின் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கியதால், மீட்பு அதிகாரிகள் அவரைப் பத்திரமாக மீட்டு அதிகாலை 4.53 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்திலிருந்த 40 பயணிகளுக்கும் எந்தவொரு காயமும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாகவும் விபத்துக் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



