பேருந்தை மோதிய லாரி! தீயில் கருகிய பயணிகள் பேருந்து!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 22,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஆயேர் ஹீத்தாம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து தீயில் கருகியது. நேற்றிரவு 11.17 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக AYER HITAM தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Nazrul Yusri தெரிவித்தார். பேருந்திலிருந்த 7 பயணிகளும் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் Nazrul Yusri தெரிவித்தார். 

மீட்கப்பட்ட 7 பயணிகளுடன் 35 வயது லாரி ஓட்டுநரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை AYER HITAM தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Nazrul Yusri உறுதிப்படுத்தினார். நள்ளிரவு 12.13 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக AYER HITAM தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Nazrul Yusri தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *