தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனின் கழுத்தில் வெட்டுக் காயங்கள்! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 28 Oct, 2025
அக்தோபர் 28,
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனின் கழுத்து வெட்டப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். நேற்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்த நிலையில் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு பத்து பஹாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டாலும் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டியிருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார். முன்னதாக அச்சிறுவன் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவிய நிலையில் காவல்துறையினர் மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். சம்பவம் குறித்து தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



