பத்துமலையில் சர்ச்சையை ஏற்படுத்திய INSPECTOR SHEILA SHARON கைது!
- Thinagaren Sanggaren
- 01 Feb, 2026
பிப்ரவரி 1,
பல்வேறு ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டும் INSPECTOR SHEILA SHARON எனும் காவல் அதிகாரி நேற்று பத்துமலையில் உள்ள வணிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட INSPECTOR SHEILA SHARON கூச்சலிட்டப்படியும் காவல்துறைக்கு எதிராகப் பல கருத்துகளைத் தெரிவிக்கப்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது.
நேற்றிரவு பத்துமலை கோயில் வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைத்த பின்னர் விடுவிப்பதாகக் காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid தெரிவித்தார்.
நேற்றிரவு சர்ச்சைக்குரிய INSPECTOR SHEILA SHARON பத்துமலை கோயில் வளாகத்தில் உள்ள வணிகரிடம் அடையாள அட்டையைக் காண்பிக்கும்படியும் இந்த இடத்தில் வணிகம் செய்ய யார் அனுமதி அளித்தது எனும்படியாக மிரட்டியதாகவும் நம்பப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் நிலமையைக் கட்டுப்படுத்த INSPECTOR SHEILA SHARON-ஐ கைது செய்ததாகக் காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid தெரிவித்தார். பத்துமலை வளாகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு எந்தவொரு சச்சரவும் இருக்க கூடாது என்பதற்காகச் சச்சரவில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக Datuk Seri Mohd Khalid தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



