நேரெதிரில் மோதிய வாகங்கள்! 1 வயது குழந்தை பலி! 2 குடும்பங்களும் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த வாகனத்தை நேராக மோதி விபத்துக்குள்ளானதில் 1 வயது குழந்தை பலியானதுடன் 2 வாகனங்களில் பயணித்த 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகாயம் அடைந்ததாக கோலா கிராய் மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார். பிற்பகல் 3.51 மணிக்கு லெபான் அஞ்சூங்கிலிருந்து ஜெலாவா செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Mazlan Mamat தெரிவித்தார்.
Honda வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த Proton Waja வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹோண்டா வாகனத்திலிருந்த இளம் தம்பதியர்களின் கால்களும் உடைந்ததாகவும் பின்னால் இருந்த 4 வயது சிறுமியும் 3 மாதமுள்ள 2 குழந்தைகளும் காயங்களுடன் தப்பியதாகவும் Proton Waja வாகனத்திலிருந்த இளம் தம்பதியரும் 4 வயது சிறுமியும் படுகாயம் அடைந்த நிலையில் 1 வயது சிறுவன் பலியானதாகவும் கோலா கிராய் மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.
Seorang bayi berusia setahun maut dalam kemalangan membabitkan dua kenderaan di Kuala Krai. Kemalangan berlaku apabila sebuah Honda melanggar Proton Waja ketika memotong. Dua keluarga dalam kenderaan tersebut mengalami kecederaan termasuk ibu bapa dan anak-anak kecil mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *