பெரும் சோதனைக்குப் பிறகு செலாயாங்கில் மீண்டும் வெளிநாட்டவர்கள் படையெடுப்பு

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோம்பாக், டிச. 8-

கடந்த இரு நாட்களுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்ட பெரும் சோதனைக்குப் பிறகும், ஜாலான் செலாயாங் பாரு பகுதியில் ரோஹிங்கியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் மீண்டும் தங்கள் நடமாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த வெளிநாட்டவர்கள் முன்பு போலவே தினசரி வியாபாரங்களை மீண்டும் தொடங்கியிருப்பது வியப்பாக இருந்தது. இருப்பினும், சோதனைக்கு முன்பிருந்ததைவிட அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

சிறு வியாபாரம், ஈரச் சந்தைக் கடைகளில் வேலை, மியான்மார், நேபாளம், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு உணவு விற்பனை உள்ளிட்ட செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. செலாயாங் நகராட்சி மன்றத்தால் (MPS) உரிமம் பெற்ற உள்ளூர் மலேசியர்களின் கடைகளும் மியான்மார், வங்காளதேசம், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையே பெரும்பாலும் பணியமர்த்தியுள்ளன.

சோதனையின்போது பலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், இவ்வளவு விரைவாக மீண்டும் இப்பகுதி வெளிநாட்டவர்களால் நிரம்பியிருப்பது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *