கேரிக்கை நிரந்தர நிர்வாகியாக்க பேக்கம் பரிந்துரை

top-news

லண்டன், மார்ச் 30-

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேவிட் பேக்கம், மைக்கேல் கேரிக்கை அணியின் நிரந்தர நிர்வகியாக  நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தற்காலிக நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பிறகு கேரிக் காட்டிய நேர்மறை தாக்கமே அவரை இந்த பதவிக்குத் தகுதியானவராக மாற்றியுள்ளது என்று பேக்கம் தெரிவித்தார்.

கேரிக் ஏன் இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர் என்பதை விளக்கும் வகையில் ஏழு காரணங்களை அவர் முன்வைத்துள்ளார்.

முக்கியமாக, மிடில்ஸ்பரோ அணியை மூன்று பருவங்கள் வழிநடத்திய அனுபவம் கேரிக்கிற்கு உள்ளது. அதன் பின்னர் ரூபன் அமோரிம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தற்காலிக நிர்வாகியாக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

மேலும், 2021ஆம் ஆண்டு இறுதியில் கூட கேரிக் தற்காலிக நிர்வாகியாகச் செயல்பட்டு, வில்லாரியல் மற்றும் அர்சனல் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், செல்சியுடன் நடந்த போட்டியில் சமநிலை முடிவை பெற்றிருந்தார்.

இந்த அனுபவங்களும் திறமைகளும் அவரை நிரந்தர நிர்வாகி பதவிக்குத் தகுதியானவராக ஆக்குகின்றன என்று பேக்கம் நம்புகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *