RM 5 மில்லியனும் Lamborghini வாகனத்தை லஞ்சம் பெற்ற முன்னாள் அமைச்சர்? - SPRM விசாரணை!
- Thinagaren Sanggaren
- 29 Dec, 2025
டிசம்பர் 29,
முன்னாள் அமைச்சர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கின் விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். இதுவரையில் முன்னாள் அமைச்சருடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 16 தனிநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் இன்று காலை சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் SPRM தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
தலைநகரில் உள்ள விளம்பரப் பலகைகளைப் புதுபிக்கும் குத்தகை தொடர்பாகத் தனியார் நிறுவனத்திடமிருந்து 5 மில்லியனுடன் Lamborghini சொகுசு வாகனத்தையும் லஞ்சமாக அந்த முன்னாள் அமைச்சர் பெற்றதாகச் செய்திகள் கசிந்த நிலையில் குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் விசாரணையின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு மக்களைக் குழப்பமடைய செய்ய தாம் விரும்பவில்லை என்றும் முழுமையான விசாரணைக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் குறித்தான விவரங்களும் விசாரணை அறிக்கையும் வெளியிடப்படும் என மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



