ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் விசாரணை! காத்திருங்கள் என AZAM BAKI பதில்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 25,

அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் குறித்து லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். சம்மந்தப்பட்ட நபருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளுக்காக அவருடன் தொடர்புடையவர்களை விசாரித்து வருவதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் தொடர்புடைய அமைச்சர் அவர் என்றாலும் தற்போது அவர் அமைச்சரவையில் என்றும் கோவிட் காலத்திற்கு முந்தைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் அவர் இருந்ததாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார். இப்போது முதற்கட்ட விசாரணையில் மட்டுமே இருக்கிறோம். முறையான ஆதாரங்களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் போது அவர் யார் என்பதை அறிவிப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *