நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க இளைஞர்கள் முக்கிய சொத்து – அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், மார்ச் 10-

பல இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட மலேசியாவில் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநிறுத்துவதில் இளைஞர்கள் முக்கியமான சொத்தாக உள்ளனர் என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் நாட்டில் உள்ள பல இனங்களையும் பல மதங்களையும் சேர்ந்த மக்களுக்கிடையில் பாலமாகச் செயல்பட்டு, மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் தூதர்களாக இருக்க வேண்டும் என்றார்.

“மலேசியா பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் நாடாகும். எனவே நாம் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் நாட்டின் ஒற்றுமையைக் பாதுகாக்கும் முக்கிய சொத்தாக இருக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

கெடா மாநில அளவிலான “ராக்கன் மஸ்ஜித் X ராக்கன் மூடா ரமலான்” நிகழ்ச்சியும், இப்தார் ஜமாயி நிகழ்வையும் அல்ஹிக்மா கல்வி வளாகத்தில் உள்ள மஸ்ஜித் அல் அரிபின் பள்ளிவாசலில் நேற்று இரவு தொடங்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இளைஞர்கள் உலக அறிவும் ஆன்மிக அறிவும் இரண்டையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் எதிர்காலத்தில் தரமான தலைமுறையை உருவாக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *