இளைஞர்களை விவசாயத்துக்கு ஈர்க்க TKPM திட்டம் – வேளாண்மை அமைச்சு
- Tamil Malar (Reporter)
- 12 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 12-
இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத் துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு (KPKM) ‘நிலையான உணவு உற்பத்தி திட்டம்’ (TKPM) என்ற முயற்சியை செயல்படுத்தி வருகிறது என வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு துணை அமைச்சர் டத்தோ சான் பூங் ஹின் தெரிவித்தார்.
இந்த திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் முயற்சியாகும். இதன் மூலம் இளைஞர்கள் விவசாய நிலங்களை முறையாக விண்ணப்பித்து பயன்படுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர்.
“உதாரணமாக ஜொகூர் மாநிலத்தில் மட்டும் ஒன்பது TKPM திட்டங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 76 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த முயற்சி மூலம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் நிலத்தை எளிதாக அணுக முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் செனட்டர் கே. சரஸ்வதி எழுப்பிய கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதை கூறினார்.
மேலும், இந்த திட்டம் மூலம் திறமையான விவசாயத் தொழிலாளர்களையும் இளம் விவசாயத் தொழில்முனைவோர்களையும் உருவாக்க முடியும் என அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



