இஸ்ரேலியக் கொடியைப் பயன்படுத்த மலேசியாவில் தடை! – பிரதமர் Datuk Seri Anwar Ibrahim

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 14,

இஸ்ரேலியக் கொடிகளை மலேசியாவில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். பாலஸ்தீனிய ஆதரவு நாடுகளாக இருந்து வரும் பல நாடுகள் இஸ்ரேலியக் கொடியைப் பயன்படுத்துவதில்லை. மலேசியாவும் அந்த கொள்கையை ஏற்பதாக இன்று நாடாளுமன்றத்தில் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணிகளில் வரம்புகள் மீறாமல் இருக்கும்படியும் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.

குறிப்பாக இஸ்ரேலை எதிர்க்கும் நோக்கத்துடன் இஸ்ரேலின் தேசிய கொடியைப் பறக்க விடுவதும் அதை சிதைப்பதும் அர்த்தமற்றது. எந்தவொரு நாட்டிற்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, ஒரு நாட்டின் கொடி என்பது மதிக்கத்தக்கது. நாம் இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இல்லை என்றாலும் இஸ்ரேலிய கொடிகளைப் பறக்கவிட்டும், அதைச் சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இது தொடர்பான வழக்குகளைக் காவல்துறை தீர விசாரிக்க வேண்டும் என்று Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *