தலைமை மாணவர்களுக்கான தலைமையியல் பட்டறை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 28,

பள்ளியில் உள்ள மாணவர்களிடையிலான தலைமைத்துவப் பண்புகள் மேம்பட்டால் நம் சமூகத்திற்குச் சிறந்த தலைவர்களை நாம் அடையாளம் காண முடியும் என தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியரும் ஓம்ஸ் அறவாரியத்தின் நிர்வாக இயக்குநருமான திருமதி சந்திராதேவி வலியுறுத்தினார். தமிழ்ப்பள்ளி தலைமை மாணவர்களுக்கான தலைமையியல் பட்டறை நேற்று காலை ஷா அலாம் தாமான் பொட்டாணி நெகாரா பூங்காவில் நடைபெற்றது. இப்பட்டறையில் சுங்கை திங்கித் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மிட்லேண்ட் தோட்டத்தமிழ்ப்பள்ளி, சுங்கை செடு தமிழ்ப்பள்ளி, குவாங் தமிழ்ப்பள்ளி, ஆகிய 5 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 130க்கும் மேற்பட்ட தலைமை மாணவர்கள் பங்கேற்றனர். 

ஸ்ரீ மூடா சாய்பாபா காப்பகத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்த பட்டறையில் ஓம்ஸ் பா தியாகராஜனின் துணைவியாரும் தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான திருமதி சந்திராதேவி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பள்ளிகளில் உள்ள பல்வேறு சூழல் கடந்த காலங்களிலிருந்து மாறுப்பட்டிருந்தாலும் மாணவர்களின் கட்டொழுங்கையும் மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளையும் நாம் தொடர்ந்து கட்டிக்காத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சிறந்த அடைவுநிலை கொண்ட மாணவர்களைத் தமிழ்ப்பள்ளி உருவாக்கியிருக்கிறது. இனியும் சிறந்த தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் என திருமதி சந்திராதேவி கேட்டுக்கொண்டார். 

தற்போதை சூழலில் அதிகரித்து வரும் பகடிவதைக் குற்றங்கள் பெரும்பாலாக ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதாகவும் தலைமை மாணவர்களின் கட்டுப்பாடுகளும் கட்டொழுக்கமும் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை திருமதி சந்திராதேவி நினைவூட்டினார். பள்ளிகள் தவிர்த்து பொது இயக்கங்களும் மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்த இது மாதிரியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என  திருமதி சந்திராதேவி கேட்டுக்கொண்டார்.

இப்பட்டறையில் சுங்கை திங்கித் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியை திருமதி வானிஸ்ரீ தேவநாயகம், பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி சவண்டேஸ்வரி கிருஷ்ணன், மிட்லேண்ட் தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு கோவிந்தசாமி சுப்ரமணியம், சுங்கை செடு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு வாசு சுப்ரமணியம்த், குவாங் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியைத் திருமதி மல்லிகா சாமு ஆகியோருடன் பொறுப்பாசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *