மரம் விழுந்ததில் பெண் உடல் நசுங்கி பலி! சிறுவன் உட்பட இருவர் படுகாயம்! – பெந்தோங்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 19,

கோம்பாகிலிருந்து பகாங் செல்லும் சாலையில் அமைந்துள்ள JANDA BAIK  பூங்காவில் மரம் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் 1 வயது சிறுவனும் ஆடவர் ஒருவரும் படுகாயம் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.56 மணிக்கு ஜண்டா பாயிக் பூங்கா ஊழியரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 12 பேர் கொண்ட மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் BENTONG மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி  Zulfadli Zakaria தெரிவித்தார்.

கனமழையின் காரணமாக 15 மீட்டர் உயரமுள்ள மரம், அருகில் இருந்த கூடாரத்தில் சரிந்ததாக நம்பப்படுகிறது. சம்பவத்தின் போது கூடாரத்திலிருந்த மூவரும் மரத்தின் கீழ் சிக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்த சிறுவனையும் ஆடவரையும் மேலதிக சிகிச்சைக்காக பெந்தோங் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் BENTONG மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி  Zulfadli Zakaria தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *