RM426,000 மதிப்பிலான 19,000 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல்!

top-news

ஜூன் 21,


நேற்று மாலை கிளாந்தானில் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் RM426,000 மதிப்பிலான அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளது. நேற்று மாலை தானா மேராவில் உள்ள Jalan Kampung Air Gatal பகுதியில் கும்பல் ஒன்று அரிசி மூட்டைகளைக் கைமாற்றும் போது அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓடியதாக தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார். 

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்த treler லாரியையும் அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் சம்மந்தப்பட்ட அரிசி மூட்டைகள் பரிசோதனைக்காக தானா மேரா எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA அலுவலகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார்.


PGA merampas 19,000 kilogram beras bernilai RM426,000 di Tanah Merah, Kelantan. Beras itu dipercayai diseludup dari Thailand. Suspek melarikan diri semasa serbuan, dan treler yang membawa beras turut disita untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *