டுங்குன் பிரிவு இடைநீக்கம் – பெர்சாத்து மாநிலத் தலைமை பரிந்துரை
- Surendran Sumdraraj
- 03 Mar, 2026
கோலா திரங்கானு, மார்ச் 3-
பெர்சத்து (BERSATU) மாநில தலைமையகம், டுங்குன் பிரிவை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பிரிவின் முழு செயற்குழு உறுப்பினர்களும் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பதவி விலகி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெர்சத்து மாநில உச்சமன்ற உறுப்பினர் பத்ருல்ஹிஷாம் ஷாபி (Badrolhisham Shafie) கூறுகையில், டுங்குன் பிரிவின் தற்போதைய நிலை குறித்து முழுமையான அறிக்கை பிப்ரவரி 21ஆம் தேதி மாநில செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய தற்காலிக செயற்குழுவை அமைப்பதற்கான பெயர் பட்டியலை மாநிலத் தலைமையகம் தயார் செய்து, கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் பைசல் அஸுமு (Ahmad Faizal Azumu) தலைமையிலான சிறப்பு குழுவிற்கு அனுப்பியுள்ளது.
“கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு குழு கூட்டத்திற்குப் பிறகு, அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தையும் வழிகாட்டுதலையும் மாநிலம் தற்போது எதிர்பார்த்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



