முகைதீனுக்கு எதிராகக் களமிறங்குகிறாரா ஹம்சா? கசியும் ரகசியங்கள்!
- Thinagaren Sanggaren
- 04 Sep, 2025
செப்டம்பர் 4,
நாளை மறுநாள் பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் பெர்சத்து தலைவர் முகைதீன் யாசினுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவரும் பெர்சத்து துணைத் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்யவிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளது. பெர்சத்து கட்சியின் Hang Tuah Jaya தொகுதித் தலைவரான Mohd Azrudin Md Idris தலைமையில் இந்த தீர்மானம் பெர்சத்து பொதுக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியது.
முகைதீனுக்கு எதிராகத் தாம் எந்தவொரு தீர்மானத்தையும்
தாக்கல் செய்யவில்லை என Datuk Seri Hamzah Zainudin விளக்கமளித்திருக்கும்
நிலையில் தீர்மானக் கடிதம் கசிந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என Datuk
Seri Hamzah Zainudin மறுத்துள்ளார். சம்மந்தப்பட்ட கட்சிதத்தில்
பெர்சத்து கட்சியின் Hang Tuah Jaya தொகுதி உறுப்பினர்கள் முகைதீன் மீது நம்பிக்கை
இழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை
என பெர்சத்து கட்சியின் Hang Tuah Jaya தொகுதித் தலைவர்
Mohd Azrudin Md Idris அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ஒரு சில துரோகிகளால் மேற்கொள்ளப்படும்
மலிவான அரசியல் என Mohd Azrudin Md Idris தெரிவித்தார். முகைதீன்
தலைமை மீதான விமர்சனங்களுக்குப் பெர்சத்துவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பதிலளிப்பதாக
Mohd Azrudin Md Idris தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



