அரசு நிகழ்ச்சிகளில் மதுபானம்! பெர்சத்து Mas Ermieyati கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 5,

அரசு நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பயன்படுத்துவது இஸ்லாத்தின் மகத்துவத்திற்குப் புறம்பானது என பெர்சத்துவின் Masjid Tanah நாடாளுமன்ற உறுப்பினர்  Mas Ermieyati Samsudin கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலா கலை கலாச்சார அமைச்சர் Tiong King Sing பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பயன்படுத்தப்படுவதாக Mas Ermieyati Samsudin குற்றம்சாட்டினார். அமைச்சராக இருந்து பொதுவெளியில் மதுபானங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் Mas Ermieyati Samsudin தெரிவித்தார். 

தனிநபராக Tiong King Sing மது பழக்கம் உள்ளவர் என்பதால் அவர் அமைச்சின் நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களை விருந்தினர்களுக்கு வழங்குவதாக Mas Ermieyati Samsudin தெரிவித்தார். தியோங் கிங் சிங் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அமைச்சர் எனும் அதிகாரத்துடன் பங்கேற்கிறார். அந்த விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் வழங்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும் என்றும் பொது நிகழ்ச்சிகளில் மது பயன்பாடு இருக்க கூடாது என்கிற விதியை அமைச்சர் மீறியிருப்பதாகவும் Mas Ermieyati Samsudin குற்றம்சாட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *