முகைதீனின் பெர்சத்து கட்சிக்கு RM 13 மில்லியன் வழங்கினேன்! தொழிலதிபர் வாக்குமூலம்!
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
ஜூலை 15,
அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகளுக்கான குத்தகைகளைப் பெற முகைதீன் யாசின் பிரதமராக இருந்த போது அவருடைய பெர்சத்து கட்சிக்கு RM 13 மில்லியன் நன்கொடையாக வழங்கியதாக Sutracom Sdn Bhd (SSB) நிறுவனத்தின் மேலாளர் Shahrin Shamsuddin உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். Jana Wibawa அரசு திட்டத்தின் மூலமாக முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-க்கு எதிராக வாக்குமூலம் அளித்த 15-ஆவது சாட்சியாக Sutracom Sdn Bhd (SSB) நிறுவனத்தின் மேலாளர் Shahrin Shamsuddin உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.
2021 மார்ச் மாதத்தில் சுமார் RM 600 மில்லியன் மதிப்பிலான சிலாங்கூர் மாநில Pulau Indah சாலைகள் மேம்பாட்டுக்கான குத்தகையை Sutracom Sdn Bhd (SSB) நிறுவனம் பெற்றது. அதனை அடுத்து 2021 அக்டோபர் முதல் 2022 நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் முகைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சிக்கு நன்கொடையாக RM 13 மில்லியன் நிதியை வழங்கியது. அரசு குத்தகையைப் பெற இந்த தொகை வழங்கப்பட்டதற்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை என்பதால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரையில் பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்குகளை அரசு தரப்பு முடக்கி வைக்குபடி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



