பெர்சத்துவைக் கலைத்துவிடுங்கள்! அம்னோ PUAD ZARKASHI கிண்டல்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 5,

அம்னோவை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கிய மகாதீரும் முகைதீனும் அம்னோவிடம் தோற்றுவிட்டதால் அவர்கள் உருவாக்கிய பெர்சத்து கட்சியைக் கலைத்துவிடும்படி அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் சட்டமன்றச் சபாநாயகருமான DATUK Puad Zarkashi கிண்டலாகத் தெரிவித்தார். மகாதீரின் அரசியல் தோல்வி அவரை ஓய்வெடுக்க சொன்னாலும் அவர் எடுக்கமாட்டார். எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்கு ஒன்னுமில்லாத பெர்சத்து மகாதீருக்கு ஆதரவாக இருக்குமே தவிர மற்றப்படி பெர்சத்துவால் ஆட்சி அமைக்க முடியாது என DATUK Puad Zarkashi தெரிவித்தார். 

பெர்சத்து தேர்தலில் முகைதீனை எதிர்த்து ஹம்சா சைனுடீன் போட்டியிட்டிருந்தால் ஹம்சா வெற்றி பெற்றிருப்பார். பெர்சத்துவில் முகைதீனை விடவும் ஹம்சாவுக்கு ஆதரவாளர்கள் அதிகம் என்பதை முகைதீனும் அறிவார் என DATUK Puad Zarkashi சுட்டிக்காட்டினார். பரவாயில்லை, பெர்சத்துவைக் கலைத்துவிட்டு எங்கிருந்து போனீர்களோ அங்கேயே மீண்டும் அம்னோவுக்குத் திரும்பி விடுங்கள் என DATUK Puad Zarkashi கிண்டலாகத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *