பொது பூங்காவில் எதிர்கட்சியின் நிகழ்ச்சிகளுக்குத் தடை! பெர்சத்து சஞ்சீவன் குற்றச்சாட்டு!
- Thinagaren Sanggaren
- 23 Jul, 2025
ஜூலை 23,
நெகிரி செம்பிலானில் உள்ள BAHAU குடியிருப்புப் பகுதி மக்களுக்காக நடத்தப்படவிருந்த விளையாட்டுப் போட்டிக்குச் சம்மந்தப்பட்ட நகராண்மைக் கழகம் வழங்கிய அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் பெரிக்காத்தான் கட்சியினர் விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை தாங்குவதால் அந்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் பெர்சத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் டத்தோ Sri Sanjeevan Ramakrishnan தெரிவித்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் தன்னுடைய உருவப் பதாகைகளை வெளியிட்டதால் JEMPOL நகராண்மைக் கழகம் பொது விளையாட்டுப் பூங்காவைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அதிகாரப்பூர்வக் கடிதத்தின் மூலமாகத் தனது தெரிவித்ததாக Sri Sanjeevan Ramakrishnan தெரிவித்தார்.
குடியிருப்புப்
பகுதியில் இருக்கும் பொது பூங்காக்களை மக்களுக்குத் தேவையான செயல்திட்டங்களுக்காகப்
பயன்படுத்துவதில் நகராண்மைக்கழகத்திற்கு என்ன சிக்கல் என Sri Sanjeevan Ramakrishnan
கேள்வி எழுப்பினார். சம்மந்தப்பட்ட நகராண்மைக் கழகம் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச்
செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட கட்சிகளுக்கு
எதிர்ப்பாகச் செயல்பட கூடாது என்றும் Sri Sanjeevan Ramakrishnan வலியுறுத்தினார். சமூகத்திற்கானச் செயல்திட்டங்கள் அரசியல் பேதமின்றி அனைவருக்குமாக
இருக்க வேண்டும் என்பதை மடானி அரசு உணர வேண்டும் என Sri Sanjeevan
Ramakrishnan நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



