30,000 இஸ்லாம் அல்லாத பெர்சத்து உறுப்பினர்கள் முகைதீனுக்கு ஆதரவு! - Datuk Sri Sanjeevan உறுதி!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 17,

பெர்சத்து கட்சியின் தலைவர் Tan Sri Muhyiddin Yassinக்கு ஆதரவாகப் பெர்சத்துவின் இஸ்லாம் அல்லாதோர் பிரிவின் 30,000 உறுப்பினர்கள் துணை நிற்கிறோம் என அதன் உதவித் தலைவர் Datuk Sri Sanjeevan உறுதியளித்தார். பெர்சத்து துணைத் தலைவர் HAMZAH ZAINUDDIN பெர்சத்துவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் நிலையில் பெர்சத்து கட்சியிலிருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் விலகுவதாக அறிவித்து வந்தாலும் 30,000 இஸ்லாம் அல்லாத பெர்சத்து உறுப்பினர்கள் முகைதீனுக்கு ஆதரவாக உறுதியுடன் இருக்கிறோம் என Datuk Sri Sanjeevan தெரிவித்தார்.

நேற்று பெர்சத்துவின் இஸ்லாம் அல்லாதோர் பிரிவின் தலைவர் Dr Chong Fatt Full பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தாலும் அதன் 30,000 உறுப்பினர்கள் முகைதீனின் தலைமை ஏற்பதாக Datuk Sri Sanjeevan தெரிவித்தார். Dr Chong Fatt Full பதவியிலிருந்து விலகியதை நாங்கள் மதிக்கிறோம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஒரு பெரிய அமைப்பில் உறுப்பினர்கள் வருவதும் போவதும் இயல்பானது, ஆனால் கட்சியின் தலைமைக்கு ஆதரவளிப்பது என்பது நிலையானது என Datuk Sri Sanjeevan தெரிவித்தார். பெர்சத்து தலைவர் முகைதீனைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலையும் தாம் முன்னெடுக்கமாட்டேன் என Datuk Sri Sanjeevan வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *