உள்கட்சி பிரச்சினை இருந்தாலும் பெர்சாத்துவில் தலைவர்கள் பற்றாக்குறை இல்லை – துன் பைசல்

top-news

சிரம்பான், பிப். 19-

உள்கட்சி பிரச்சினைகள் மற்றும் சில குழுக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சில பிரிவுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், பெர்சாத்து கட்சியில் தலைவர்கள் பற்றாக்குறை இல்லை என அதன் தகவல் பிரிவு தலைவர் டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அசீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது, முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் ஆதரவாளர்களின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சில பிரிவுகளில் கூட, கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் பொறுப்பேற்று கட்சியின் பணிகளைத் தொடரக்கூடிய திறன் கொண்டுள்ளனர் என்றார்.

“ஒவ்வொரு பிரிவிலும் பிரச்சினை ஏற்பட்டாலும், மாற்று தலைவர்கள் முன் வருவார்கள். இந்தக் கட்சி தலைவர்களற்ற நிலையில் இல்லை. பிரிவு தலைவர் இல்லாவிட்டாலும், துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பை ஏற்று கட்சியின் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்,” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *