110 கிலோ எடை சூரிய கரடி பிடிபட்டது
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
செத்தியூ, மார்ச் 9-
திரங்கானுவின் செத்தியூ மாவட்டத்தில் உள்ள கம்போங் மெர்பாவ் , சுங்கை தொங் பகுதியில் அமைக்கப்பட்ட வலையில் 110 கிலோ எடையுடைய சூரிய கரடி ஒன்று நேற்று காலை சிக்கியது.
திரங்கானு வனவிலங்கு பாதுகாப்புத் துறை (PERHILITAN) இயக்குநர் டெனிஸ் டென் சூன் யூங் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அந்த பகுதியில் காட்டு விலங்கு சுற்றித் திரிவதாக கிராம மக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
“மக்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து அதே நாளில் பெசுட் மாவட்ட PERHILITAN அதிகாரிகள் ஒரு வலையை அமைத்தனர்,” என்று அவர் கூறினார்.
அந்த வலையில் சிக்கிய கரடி ஆண் கரடியாகும். சுமார் 110 கிலோ எடையுள்ள அந்த விலங்கு தற்போது ஆரோக்கியமாகவும் நிலைமை சீராகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தேவையான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புகளுக்குப் பிறகு அந்த கரடி அதன் இயற்கை வாழ்விடமான காட்டு பகுதியில் மீண்டும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



