19 சட்டவிரோத மறுசுழற்சி மையங்களிலிருந்து RM332 மில்லியன் சொத்துகள் பறிமுதல்!
- Thinagaren Sanggaren
- 22 Jul, 2025
ஜூலை 22,
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நாடு முழுவதும் உள்ள மறுசுழற்சி மையங்களில் மேற்கொண்ட சோதனையில் RM332 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் விளைவாக மறுசுழற்சி மையங்களின் மூன்றாம் கட்ட இரண்டாம் கட்ட ஊழியர்களிடமும் மேலாளர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக SPRM தெரிவித்துள்ளது. இதுவரை பினாங்கில் 6 மறுசுழற்சி மையங்களிலும் , சிலாங்கூரில் 7 மறுசுழற்சி மையங்களிலும், கெடாவில் 4 மறுசுழற்சி மையங்களிலும், நெகிரி செம்பிலானில் 1 மறுசுழற்சி மையத்திலும், ஜொகூரில் 1 மறுசுழற்சி மையத்திலும் சோதனைகள் மேற்கொண்டதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மொத்தம் 19 மறுசுழற்சி
மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 27 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்
142 நிறுவன வங்கிக் கணக்குகளையும் 182 தனியார் வங்கிக் கணக்குகளையும் என மொத்தம்
324 வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகவும் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் மதிப்பு
RM150 மில்லியன் என்று மறுசுழற்சி மையங்களிலிருந்து பறிமுதல்
செய்யப்பட்டவையின் மதிப்பு RM183 மில்லியன் என்றும்
மொத்தமாக 19 மறுசுழற்சி மையங்களிலிருந்து RM332
மில்லியனுக்கும் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின்
சிறப்பு நடவடிக்கை பிரிவின் இயக்குநர் Datuk Mohamad Zamri Zainul Abidin விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



