மூன்று ஆண்டுகளில் புதிய பாதையில் மலாக்கா – டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப்
- Surendran Sumdraraj
- 31 Mar, 2026
மலாக்கா, மார்ச் 31-
கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வரும் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப் தலைமையில் மலாக்கா மாநிலம் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது நிர்வாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல கொள்கைகள் மற்றும் திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சி திசையை மாற்றியமைத்துள்ளன. குறிப்பாக பொருளாதாரம், முதலீடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“என் தலைமையிலான இந்த நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து கொள்கைகளும் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு திட்டமும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்று அவர் விளக்கினார்.
மேலும், தனது நிர்வாகத்தின் சாதனைகளைச் சொற்களில் விளக்குவது எளிதல்ல என்றும், அதன் உண்மையான மதிப்பீடு மக்களிடமிருந்தே வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நான் அதிகமாக பேச தேவையில்லை. இந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளை மக்கள் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் மதிப்பிடுவார்கள். அந்த மதிப்பீடு அவர்களின் மனதில் இருந்து வரும்,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



