பிந்துலுவில் கனமழை, மக்கள் துயர்துடைப்பு மையங்களுக்கு மாற்றம்
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
கூச்சிங், டிச. 9-
நேற்றிரவு தொடர் கனமழையால் பிந்துலுவின் ஒரு நீண்டவீட்டில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து, அங்கிருந்த குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நடு இரவு ஏற்பட்ட இந்த சம்பவம், மக்களின் பாதுகாப்புக்காகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது.
இன்று அதிகாலை 5.30 மணி வரை, ரூமா பஞ்சாங் ரோசெலிந்த் சுவாங் நீண்டவீட்டில் வசிக்கும் 25 பேர்கள் பிந்துலு சுஹாரா மண்டப மையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக இடமாற்ற மையத்தில் (PPS) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள், மதியத்திலிருந்து பெய்து வந்த மழை காரணமாக நீர் மட்டம் திடீரென்று உயர்ந்ததாகத் தெரிவித்தனர்.
சரவாக் மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) இயக்கப் பிரிவு மையம் (PGO) பேச்சாளர் கூறுகையில், இரவு 12.52 மணிக்கு அவசர உதவி கோரப்பட்டதாகவும், உடனடியாக பிந்துலு தீயணைப்பு நிலையத்திலிருந்து குழுவினர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
1.04 மணி அளவில் சம்பவ இடத்தை எட்டிய மீட்புக்குழுவினர், நீர்மட்டம் ஏற்கெனவே பாதுகாப்பு அளவை மீறி இருந்ததை கண்டறிந்தனர். அந்தப் பகுதி பிந்துலு தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததால், மாற்றுப்பணிகள் வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டன.
தீயணைப்பு துறையினர், PPS-ல் அனைத்து அடிப்படை தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதையும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதையும் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



