தொழில்சாலையில் தீ! 100 தொழிலாளர்கள் மீட்பு!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 22,

பலகை தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழில்சாலையில் சிக்கியிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். இன்று காலை பிந்துலூவில் உள்ள MDF எனும் அறிய வகை பலகைகள் தயாரிக்கும் தொழில்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தொழில்சாலை ஊழியர்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 15 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Bintulu தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Abdullah Sedi தெரிவித்தார். 

ஒரு குழு தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் மற்றொரு குழு தொழில்சாலைக்குள் சிக்கியிருந்த 100 தொழிலாளர்களை மீட்டதாகவும் Abdullah Sedi தெரிவித்தார். காலை 9.40 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்பட்டதாகவும் காலை 10.20 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் Abdullah Sedi தெரிவித்தார். இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Abdullah Sedi உறுதிப்படுத்தினார். தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் 40% தொழில்சாலை தீயில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *