விஜயை தனித்துப் போட்டியிட வைத்தது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை தனித்து தேர்தலில் போட்டியிடச் செய்தது பாஜக தான் என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். செய்யூர் தொகுதியில் விசிக வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அதேவேளையில் கூட்டணி வாக்குகள் சிதறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திய அதிமுக இன்று இல்லை. தற்போது இரட்டை இலை சின்னம் பாஜகவின் இன்னொரு சின்னமாக மாறிவிட்டது” எனவும் அவர் விமர்சித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டியிடுவதற்கு பின்னால் பாஜகவின் அரசியல் திட்டம்தான் உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்” என தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *