பல தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தேசிய முன்னணி – முகமது ஹாசான்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 6–

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பல சட்டமன்றத் தொகுதிகளில் பாரிசான் நேஷனல் (BN) முன்னிலையில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ள அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹாசான், வாக்குப்பதிவு நாள் வரை கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு வார கால தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், பாரிசான் நேஷனலுக்கு வழக்கமாக ஆதரவளிக்கும் ஏராளமான வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“எங்களின் மதிப்பீட்டின்படி, தற்போது நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் பின்தங்கியிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இறுதி விசில் ஒலிக்கும் வரை, அதாவது வாக்குப்பதிவு நாள் மாலை 5 மணி வரை கடுமையாக உழைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆதரவு வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க அழைத்து வருவதில் கட்சியின் தேர்தல் இயந்திரம் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *