பாரிசானும் பக்காத்தானும் ஒன்றாக இருக்கும்! பாரிசான் தனித்து செயல்படாது!

top-news

ஜூன் 14,


ஒற்றுமைக் கூட்டணியில் இருக்கும் பாரிசானும் பக்காத்தானும் இப்போது சபா சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் கூட்டணியை அமைத்திருப்பதால் தனிப்பட்ட முறையில் பாரிசானும் பக்காத்தானும் தனித்து இயங்காது என Barisan Nasional பொதுச் செயலாளரும் உயர்கல்வி அமைச்சருமான Datuk Seri Zambry Abdul Kadir உறுதியளித்தார். சபா சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில் Gabungan Rakyat Sabah (GRS), Barisan Nasional, Pakatan Harapan (PH) என 3 பெரும் ஆளுமைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதை பாரிசான் பொதுச் செயலாளர் Datuk Seri Zambry Abdul Kadir நினைவூட்டினார்.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனிபட்ட முறையில் இனி எந்தவோர் அறிக்கையை வெளியிட்டாலும் அது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி இந்த கூட்டணி மீதான நம்பிக்கையை இழக்க செய்யும் என்பதை Datuk Seri Zambry Abdul Kadir நினைவூட்டினார். அறிக்கைக்குப் பதில் அறிக்கை என அரசியல் கட்சிகள் குழாய் அடி சண்டையில் ஈடுபட்டது போது. பிரச்சனை என்ன என்பதைப் பற்றி உட்கார்ந்து பேசி அதற்கானத் தீர்வை நோக்கி நகர்வோம் என Datuk Seri Zambry Abdul Kadir வலியுறுத்தினார்.


Setiausaha Agung BN, Datuk Seri Zambry Abdul Kadir menegaskan Barisan Nasional dan Pakatan Harapan akan bergerak bersama dalam Pilihan Raya Negeri Sabah sebagai sebahagian daripada gabungan GRS-PH-BN. Beliau menyeru elakkan kenyataan berasingan yang boleh timbulkan kekeliruan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *