கால்வாயில் விழுந்த சிறுவன் காணவில்லை! தேடுதல் பணி தீவிரம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 29,

கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 10 வயது சிறுவனைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது, நேற்று மாலை 3.30 மணிக்கு ஷா அலாம்  Bandar Puncak Alamமில் உள்ள Lorong Cakera Purnama கால்வாயில் விழுந்த சிறுவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாமதமாக மீட்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதால் தேடுதல் பணி இன்று வரையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரவு 7.47 மணிக்குப் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் தகவல் அளித்ததாகவும் இரவு 8 மணிக்கு 25 பேர் கொண்ட மீட்புக் குழு நள்ளிரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி  இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இன்று காலை 10 மணி நிலவரப்படி கால்வாயின் 8 கிலோ மீட்டர் தூரம் தேடியிருப்பதாகவும் அடைமழையின் காரணமாகக் கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் தேடுதல் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி  இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *