நீரில் மூழ்கிய குடும்பம்! 3 வயது சிறுவனும் பெற்றோரும் பலி!

- Sangeetha K Loganathan
- 07 Jun, 2025
ஜூன் 7,
கிள்ளான் Tanjung Harapan கடல் சுற்றுப் பயணத்தின் போது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று மாலை 4.30 மணிக்குப் படகு கவிழ்ந்ததில் படகிலிருந்த 17 வயது இளைஞர் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் உடல் தற்போது பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களில் 3 வயது சிறுவன் அடங்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 50 வயது Cheu Son Hin, 29 வயது Fong Yong Sen, 3 வயது Darren Gan என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படகு சவாரியின் போது கட்டுப்பாட்டை இழந்த படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga sekeluarga termasuk seorang kanak-kanak lelaki berusia 3 tahun maut selepas bot yang mereka naiki terbalik semasa lawatan laut di Tanjung Harapan, Klang. Seorang remaja lelaki berusia 17 tahun terselamat dan sedang dirawat di Hospital Tengku Ampuan Rahimah. Mangsa dikenalpasti sebagai Cheu Son Hin (50), Fong Yong Sen (29), dan Darren Gan (3). Polis sedang menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *