புத்தம் புதுசாய் வாங்கிய கார்! அன்றே கொடூர விபத்துக்குள்ளான பரிதாபம்! 6 பேர் பலி

top-news
FREE WEBSITE AD

சுங்கை பட்டாணி, ஜூன் 8: காலையில் புத்தம் புதிய புரோட்டான் எக்ஸ்50 ரக காரை எடுத்து மகிழ்ச்சியாய் பயணித்த குடும்பம்,  பிற்பகல் நடந்த சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று சம்பந்தப்பட்ட அந்தப் புதிய வாகனத்தில் சென்ற  ஆறு குடும்ப உறுப்பினர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் கார் ஒரு லாரியுடன் மோதியதில், 6 மாதக் கைக்குழந்தை, 3 வயது சிறுமி,  7 வயதுசிறுவன் உட்பட அறுவர் உயுரிழந்தனர்.


நேரான சாலையில் பயணித்துக் கொண்டிருந்த புரோட்டான் எக்ஸ்50 வாகனம், எதிர்ப்புறப் பாதைக்குள் நுழைந்து, மண் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதை, வாகனத்தின் டாஷ்போர்டு கேமரா பதிவுசெய்தது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *