முதலை அபாயம்! கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
கடற்கரையில் முதலை ஒன்று சுற்றி வருவது போன்ற காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட கடற்கரைக்குள் பொதுமக்கள் நுழையவும் கடற்கரை செயல்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக KOTA KINABALU பாதுக்காப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோத்தா கினாபாலுவில் உள்ள TANJUNG ARU கடலில் முதலையின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் விலங்குகள் நலத்துறையினரும் மீட்பு ஆணைய அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் முதலையைத் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலையைக் கண்டுப்பிடிக்கும் வரையில் சுற்றுலா பயணிகள் TANJUNG ARU கடல் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதலையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pihak berkuasa Kota Kinabalu mengeluarkan larangan kepada orang ramai untuk memasuki pantai Tanjung Aru selepas video kehadiran buaya tular di media sosial. Pasukan keselamatan dan pihak berkuasa sedang giat mencari buaya tersebut bagi memastikan keselamatan penduduk serta pelancong.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *