ஆட்சியைக் கலையுங்கள்! தேர்தலை நடத்தலாம்! அம்னோ உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 30 Apr, 2026
ஏப்ரல் 30,
பாரிசான் பக்காத்தான் கட்சிகளின் ஒற்றுமை கூட்டணிக்குள் நம்பிக்கை இல்லை என்றால் ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என ஜொகூர் மாநிலச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Puad Zarkashi தெரிவித்தார். குறிப்பாக நெகிரி செம்பிலானில் பலவீனமான ஓர் அரசாங்கத்தை அமைத்திருக்கும் Datuk Seri Aminuddin Harun எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என Datuk Puad Zarkashi சுட்டிக்காட்டினார். மக்களின் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சி மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரால் மாநிலத்தைச் சுமூகமாக நிர்வகிக்க முடியாது என Datuk Puad Zarkashi தெரிவித்தார்.
இப்போதைய சூழலில் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத்தேர்தலை நடத்துவது மட்டுமே மக்களாட்சியை நிலைநிறுத்த முடியும் என Datuk Puad Zarkashi தெரிவித்தார். நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசாராக இருக்கும் Datuk Seri Aminuddin Harun பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்தாலும் அவர் அன்வாருக்கு நெருக்கமானவர் இல்லை. Datuk Seri Aminuddin Harun, பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவர் Rafiziக்கு நெருக்கமானவர் என்பதால் அமினுடின் ஹாருனை அன்வார் தற்காக்கமாட்டார் என தாம் கருதுவதாக Datuk Puad Zarkashi தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலப் பாரிசான் கூட்டணி தெளிவாக இருக்கிறது. மாநில மெந்திரி பெசாருடன் இணக்கமாக இருக்க முடியாததால் அவர்கள் வழங்கிய ஆதரவை மீட்டுக்கொண்டனர். ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாரிசான் இல்லை. ஏனெனில் பெரிக்காத்தான் பாரிசானைக் கூட்டணிக்கு அழைத்தும் பாரிசான் பெரிக்காத்தானின் அழைப்பை மறுத்ததை ஜொகூர் மாநிலச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Puad Zarkashi சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



